Friday 29 March 2013

"தி தர்ட் வர்ல்ட் வார்" மூன்றாவது உலக மஹா யுத்தம் -முன்னுறை [ஒரு கண்ணோட்டம்]

|| ஹரி ஓம் ||
ஏனென்றால்....
   
முப்பதாம் நூற்றாண்டின் [அல்லது மூன்றாவது ஆயிரத்தாண்டு]ஆரம்பம், அதாஅவது செப்டம்பர் 11,2001 லிருந்து 
உலகில் உள்ள ஒவ்வொரு நாடும் அவரவர்கள் தற்காப்புக்காகவும் , வருங்கால ராஜதந்திரம் ,தோரணை கொண்டு மறு
பரிசீலனை செய்ய ஆரம்பித்தனர். உலகில் உள்ள சில முக்கிய நாடுகளுக்கு,தீவிரவாதக் கொள்கை, பாதை பற்றி
தெரிந்திருந்தும் ,அமெரிக்கா, ரஷ்யா தீவிரவாதத்தை ஊக்குவித்து ஒருவருக்கொருவர் மேல் ஏவிவிட்டனர்,உபயோகித்தனர்.
ஆனாலும் ,செப்டம்பர் 11,2001 சம்பவம் ,சுலபமாகவும், சுருக்கமாகவும் இருந்ததோடு,குறைந்த செலவில் கச்சிதமாக
நடந்தேரியது.அதன் விளைவு தன்னை தானே உலகின் மிக வலிமையான, யாராலும் வெல்லமுடியாத தேசமாக மாறை 
த்தட்டி த்திரிந்த அமெரிக்கா தானே ஊக்குவித்த தீவிரவாதத்திற்கு விழித்துக் கொண்டது. தீவிரவாதத்தினால் பாரதம் பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வருகிறது, அந்த வேதனையே ஒரு பலத்த அக்னி பிழம்பு போல் அமெரிக்காவின் நெற்றியை 
சுட்டுவிட்டது போலும். அதுவரை பாரதம் அமெரிக்காவுக்கு தீவிரவாதத்தை சுட்டிக்காட்டிய ஆவணங்கள்,ஆதாரங்கள் 
அவ்வப்போது அளித்தும் அதை ஒதுக்கிவைத்து உதாஸீனப்படுத்திய அமெரிக்காவுக்கே தானே உருவாக்கி ஊக்குவித்த
தீவிரவாதத்தை போறாட ஆயத்தமானது.

      தீவிரவாதமோ, தீவிரவாதத்தை எதிராக போரோ, இந்த தொடர் கட்டுறையின் விஷயமட்டுமல்லாமல் ,இதுவரை நடந்த
சம்பவத்தின் ஆய்வின்பேரில்,கூடிய சீக்கிரமே வருங்காலத்தில் நடக்கவிருக்கும் ப்ரதிபலித்தல் ஆகும்.வரும் 20-25 ஆண்டு தகறாரு,சண்டை, பூசல் தினசரி க்ரமமாகவும்,பூமியின் ஒவ்வொரு பாகத்திலும்,மூலையிலும் நடந்துவரும். தத்துவம், ந்யாயம்
நியமம், கோள்கைக்கு மதிப்பிறாது. இந்த கலவரத்துக்கு,நீதி நெறி தெரியாது."வலிமையே வெல்லும்"என்பதே ஒரே கட்டளை ஆகும்

    அவ்வகையில் அரசியல் விளையாட்டு,ரகசியத்திட்டம்,செயல்பட இருக்கையில்; அளவுக்குமீறிய வலிமையுடன்,வலுச்சண்டை,
தயை தாட்சண்யம் பார்க்காத, வன்முறை முதலியன மேலோங்கி பல ஆண்டு காலம் நீடித்து இருக்கும். மூன்றாவது உலகமஹா யுத்தம் ஆரம்பத்தில், அந்தந்த நேச நாடுகள் இருதரப்பிலும் சேர்ந்து கொள்ள ,சில வெளிப்படையாக நீதிநெறி புரக்கணிப்பதோடு,
சில நாடுகள் சற்று பயந்து ,பொறுத்து நீதிநெறிக்குட்பட்டும் சமமாக நடந்து வரும். அதுவே ஒரு காலகட்டத்தில் இருதரப்பிலும் விட்டுக்கொடுக்காது ,தான் செய்ததை ஒப்புக்கொள்ள மறுப்பார்கள், மறைமுகமாகவும் கூட. இதேதான் தற்போது நடந்து வருகிறது.
அதுவே வெகு சீக்கிறத்தில் ப்ரதானமாக் நடந்துவரும். சாதாரண மனிதனோ, அரசியல் அதிகாரியோ ,யுத்த ஆய்வோ ,யுத்தத்தை பற்றிய சர்ச்சையோ வெளிப்படையாக செய்யமுடியாது. ஏனெனில் யுத்தம் ஒரு அதிசய, ரகசிய திட்டத்தின் விளைவு ஆகும். 
90% உலக அளவில் உள்ளமக்கள் அவரவர் ஆழ்ந்த சிந்தனையோ,யுத்தத்தின் அரசியல் காரணமோ, அல்லது அதன் உண்மையையோ ,சிறிது அங்கங்கே கிடைத்த செய்தியின் யூகமாகும் , மூல காரணம் அறியாதவர் ஆவர். எப்படியாகிலும்
இவர்களே யுத்தத்தின் விளைவான, துக்கத்துக்கும் அவதிக்கும் உள்ளாகி, யுத்தத்தின் பாதிப்பாலும் தாக்கப்படுகின்றனர்.
   
சுத்த சுதந்திரக் குடியரசின் வலிமையே யுத்தத்தின் தீயை அணைக்கவல்லது. இன்று எவ்வளவு நாடுகள் சுதந்திர க்குடியரசு?
சட்டமன்ற குடியரசின் தந்தை என்று கருதப்பட்ட யூ.கே க்ரேட் ப்ரிடன் போன்ற நாடு வலுவிழந்து ,மோசடிக்கும், உள்வாக்குவாதம், கலவரங்களுக்கு  இறையாகியிருக்கிறது. இந்திய நிலைக் கண்டத்தில் குடியரசு வேறுன்றபோதிலும்,சிறிய, பெறிய பல அரசியக்கட்சிகள், அதை நிலை நாட்டாது,மோசடியில் மூழ்கி த்தவிக்கின்றன. ரஷ்யா, சைனா, குடியரசு பேருக்குக் கூட இல்லை.
அமெரிக்கா அதில் ஆதாரமாக இருந்தாலும், போதை லாகிரிக்கு பலியாகும் இளைய சமுதாயம், படித்த பிறந்த மண் அமெரிக்கர்கள் குறைபாடு, குடிமக்களின் அளவான, குறைந்த  பங்கேற்பு அமெரிக்க, குடியரசைக் குலுக்கி குலைத்துவிட்டது.
 
 அதைத்தவிர,அமெரிக்காவின் பலத்தப்ரசாரம், தொலைக்காட்சி,இன்டர்னெட் (internet),  வலைவேலைப்பாடு(network),
(branches),அஙகங்கே அமைத்து, பதித்து பலதேசத்தின் மக்கள் திரண் ஊடகங்கள்(Mass Media) ,அமெரிக்காவின் ரகசிய கழகம்(குழு)
(Americca's secret organaizations) வெற்றியுடன் கைப்பற்றி பாரதத்தின் ஜன்மவிரோதியான பாகிஸ்தானே தீவிரவாதத்தின் அடிப்படை என்று உறுதி கூறியது. தற்போது மறைமுகமாக செய்து வருவதை சிறிதே காலத்தில் பாகிஸ்தான் வெளிப்படையாக தீவிரவாதிகளுடன் சேர்ந்து போர் உருவாக்கும்.

     வரும் காலத்தில் இன்றைய சமன்பாடு நாளை இறாது. இன்று 7.00 மணிக்கு நடப்பது ,நடந்து  முடிந்தவுடன் 7.05க்கு
தூக்கி எறியப்படும். இது வருங்கால ஜோசியம் அல்ல. இது ஒரு ஆய்வு, அனுமானம். இதிஹாஸம், நடந்து வரும் சம்பவங்களிலிருந்து கணிப்பேயாகும் . வரப்போகும் 25  ஆண்டுகளில் ஆயிரம் சம்பவங்கள், நூறு இடத்தில் நடக்கும்.இதைப்பற்றி படித்தவர்கள் நன்கு அறிவர். நூறு சம்பவங்கள் இப்பவும் நடந்து கொண்டிருக்கும், ஆனால் முக்கியமாக பத்தே வர்ணிக்கப்படும். 

90% இங்கு, இதில் சேர்க்கப்படவில்லை(அவசியமில்லை).ஏனெனில் அதன் ஆய்வு ஆனபோதிலும், அவை பதிவும் ஆகவில்லை.
நமது காலம் காட்டும் காலெண்டர்(பஞ்சாங்கம்) ஒரு கணித கணிப்பின் பேரில் வெளியாகிறது. இந்த மூன்றாவது மஹாயுத்தத்தின் 
காலெண்டரோ,  இக்கணக்கிற்கு உள்படாது, அடங்காது. அது ஒவ்வொரு நாளும் மாறிக்கொண்டே இருக்கும் 
    
நான் என்னைப்போல் உள்ள சாதாரண நண்பர்களுக்கு ,என்னை அறிமுகப்படுத்திக்கொண்டு இந்த மூன்றாவது உலக மஹாயுத்தத்தை ப்பற்றி சிறிதளவு ,இரண்டு சதவிகிதமாவது தெறிந்து கொள்ளுதல் அவசியம் என்கிறேன்.
   ஆகையால் ,இதுவே இந்த எழுத்தின் முயற்சி ..........
    என் நண்பர்களுக்கு...............
     அநிருத்தா  






|| ஹரி ஓம் ||