Wednesday 8 April 2015

"விஞானமும் , வேதாந்தமும்[சமயம்,மதம் ] ஒரே கதையையே [தத்துவத்தை] சொல்லும் வெவ்வேரு மொழிகள்". ----டேன் ப்ரவுன் கருத்து.


கடந்த வருடம் நான் படித்து வந்த கட்டுரைகள் பட்டியலில் டேன் ப்ரவுன் அவர்கள் எழுதிய "டிஜிடல் ஃபோர்ட்ரெஸ்" , டிசெப்ஷன் பாயிண்ட்இரண்டும் உண்டு. அவை  எனக்கு மிகவும்  பிடித்திருந்தன, ஆகையால் ,அதன் எழுத்தாளரான டேன்ப்ரவுனையும் புகழ்ந்து எனது ப்ளாக்கில் இரு கட்டுரைகள் போஸ்ட் செய்திருந்தேன்


உங்களுக்கும் டேன்ப்ரவுன் பிடித்தமான ஒருவராக இருந்தால், இந்தவாரம் நீங்கள் பாரதத்தில் [இந்தியாவில்] இருந்திருந்தால் ஒரு கிளர்ச்சியூட்டும் வாரமாக அனுபவித்திருக்கக்கூடும். ப்ரபல அமெரிக்கப்பத்திரிகையான "டைம்ஸ் மெகஜினால்" அறிவிக்கப்பட்ட 100 உலகில் மிகுந்த செல்வாக்குள்ள நபர்களில் ஒருவரான டேன்ப்ரவுன் டெல்ஹியில் ஒரு வருடாந்திர இலக்கிய விழாவில் கலந்து கொண்டு , பிறகு மும்பையில் நேஷனல் சென்டர் ஃபார் பர்ஃபார்மின்க் ஆர்ட்ஸ் [என்.சீ.பீ.]   வந்திருந்தார். அவர் அவரது  காலம் கடந்த பாரத சுற்றுலா வில்  நம் மக்களினால் கிடைத்த   வரவேற்ப்பு  , அன்பு ஆதரவு கண்டு ," நான் என் வீட்டிற்கே வந்திருக்கிறேன்" என்றார்.


அவர் டெல்ஹியில் நமது அரசாங்கத்தின் சிரிஃபோர்டில் உள்ள "ப்ரீமியர் மல்டி ஆடிட்டோரியம் காம்ப்ளெக்ஸ்" ப்ரசங்க மண்டபத்தில் அளவு கொள்ளா ரசிகர்கள் , கூட்டத்திற்க்கு  ப்ரசங்கம் செய்தபோது கூறுகின்றார் ---"நான் சிறுவயதிலிருந்து மதமும் விஞானமும் ஒரேவீட்டில் வசிப்பதை கண்டே  வளர்ந்தேன். அவர் மதமரபு சார்ந்ததாய்க்கு ப்பிறந்தவர்அவர் தாய்  ஒரு சர்ச்சின் பாடகர்கள்  கூட்டம் நடத்துபவர்அத்துடன் ஒரு ஆசிரியை, பள்ளி புத்தக எழுத்தாளரும் ஆவர்நான் எனது
13வயதில் விஞானத்திலும்  வேதாந்தத்திலும் [வேதாங்கம்] பல வேறுபாடுகள் உள்ளதை உணர்ந்தேன். எது உண்மையை த்தெரிவிக்கின்றது என புரியவில்லை.
காலப்போக்கில் விஞானமும் மதத்தின் வேதங்களும் ஒரே விஷயத்தைச் சொல்லும் வெவ்வேரு மொழிகளே என முடிவுக்கு வந்தேன். விஞானம் விடையை காண்கின்றது, வேதாந்தமோ வினாவை சுவைக்கின்றது[ அலசுகின்றது].


2005ஆம் ஆண்டு  ஃபோர்ப்ஸ் பத்திரிகையினால் 12 வதாக  வரிசைப்படுத்திய100 செல்வாக்குள்ள முக்கியஸ்தனான "டேன் பரவுன்" இதுவரை ஆறு  கட்டுறைகளை புத்தகமாக வெளியிட்டுள்ளார். இருபது கோடி ப்ரதிகள் 52 மொழியில்  உலகமெங்கும் விற்கப்ப்ட்டுள்ளன .அவர் கட்டுரைகள் ரகசிய சமுதாயம் , சூழ்ச்சி, அறிகுறி  அனுமானம் , துப்பு முதலிய விஷயங்களினால் விருவிருப்பாக, ஸ்வாரஸ்யாமகவே  இருக்கும். அவரது வெளியீடுகளில் "டிஜிட்டல் ஃபோர்ட்ரஸ் 1998 ,ஏன்ஜல்ஸ் அண்ட் டெமன்ஸ்  2000  , டிசெப்ஷன் பாயிண்ட்  2001    ,  அதில்   டா வின்சி கோட்  2003  என்ற வேளியீடு சர்ச்சைகுள்ளதாக இருந்து , அபாரமாக விற்பனை ஆகியது, அமெரிக்காவில் வெளியாகி ஒரே வாரத்திற்குள்  ந்யூயார்க் டைம்ஸின் பட்டியலில் முதலிடம் பெற்ற ஒன்றாகும். லாஸ்ட் சிம்பால் 2009    , இன்ஃபர்னோ  2013  அதைத்தவிர வெளி வந்தன. அவரது ராபர்ட் லேங்க்டன் தொடர் அதிகமாக விற்பனையாகும் தொடர்களில் ஏழாவது இடத்தைப்பெற்றுள்ளது. அதில் இரண்டு  கட்டுறைகள் " டா வின்சி கோட், ஏன்ஜல்ஸ் அன்ட் டெமன்ஸ்" புகைப்படங்களில்  அனுமதிக்கப்பட்டன. 2004ல் அவரது நான்கு நாவல்கள் ந்யூயார்க் டைம்ஸ் பட்டியலில் இடம் பெற்றன . அவர் தற்போது ஒரு புதிய நாவல் எழுதுவதிலும் , லாஸ்ட் சிம்பால் என்னும் நாவலின் புகைப்படமாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

எப்பொழுது  மதிப்பிற்குறிய  டேன்ப்ரவுன் போன்ற புகழ்பெற்றவரின் அணுகுமுறையும்  அறிவாற்றலும்  ’விஞானமும் மத வேதாந்தமும் ஒரே தத்துவத்தை சொல்லும் இரு மொழிகள் என்ற கருத்தை  குறிப்ப்ட்டதோவிஞானமும் , மத வேதாந்தமும் ஒரே  நாணயத்தின் இரு பக்கங்கள்  என்றே அழுத்தமாக உற்ஜிதப்படுத்திகின்றது. இது இவ்விஷயத்தில் சாமான்ய ஜனங்களின் மனத்தில் குழப்பம் ஏற்படுத்தும் சந்தேக வினா எழுப்பும் அறிவாளிகள் , மேதாவிகளுக்கு தக்க விளக்க மாகும்.

நான் டேன் ப்ரவுனின் அனைத்து நாவல்களும் படித்து விட்டேன்அவை எவருக்கு , துப்பு , ரகசிய வாழ்க்கை , சமுதாயம் , அறிகுறி , முதலியவற்றில் ஆர்வமுள்ளதோ அவர்களுக்கு உகந்தவை.
ஹரி ஓம் || ஸ்ரீ ராம்  || அம்பக்ஞ|| 









No comments:

Post a Comment